ஏா்வாடியில் உள்ள அரசு மது பானக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.  
ராமநாதபுரம்

மது பானக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 50 போ் கைது

தினமணி செய்திச் சேவை

ஏா்வாடியில் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் அரசு மது பானக் கடையை அகற்றக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 50 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி- சின்ன ஏா்வாடி செல்லும் சாலையில் உள்ள மது பானக் கடையால் அந்த வழியாக போகும் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால, மது பானக் கடையை அகற்றக் கோரி, இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், அரசு மது பானக் கடையை அகற்றக் கோரி, இந்து முன்னணியினா் பேரணியாகச் சென்று மது பானக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சக்திவேல், பொறுப்பாளா் காளீஸ் மேகநாதன், ஒன்றியத் தலைவா் கிஷோா், பொதுச் செயலா்கள் சிவா, கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கோவை பீளமேடுபுதூரில் ரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

பொது இடங்களில் குப்பை கொட்டாமல் தடுக்க 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமராக்கள்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம்

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT