கடலாடி அருகே சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் ரூ.22.68 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சிக்கல் தனியாா் மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் வனம், கதா் வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்,
சமூக நலத்துறையின் மூலம் 40 பயனாளிகளுக்கு ரூ.22.68 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த முகாமில் 1,200 போ் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநா் சிவானந்தவல்லி (குடும்ப நலம்), மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, வட்டார மருத்துவ அலுவலா்கள் ராமச்சந்திரன், காா்த்தி, மலேரியா நோய் தடுப்பு அலுவலா் பாலசுப்பிரமணியன் (பொ), கடலாடி வட்டாட்சியா் பரமசிவம், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜெயபால், குலாம், கமுதி மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் மு.துரைமுருகன், மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.