முதுகுளத்தூரில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய தண்ணீரில் மீன் பிடித்த பொதுமக்கள்.  
ராமநாதபுரம்

காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீரில் மீன் பிடித்த பொதுமக்கள்

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூரில் காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் வெளியேறிய தண்ணீரில் சேலை, பாத்திரங்கள் மூலம் பொதுமக்கள் மீன்களைப் பிடித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதுகுளத்தூரிலிருந்து கமுதி செல்லும் சாலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டா் தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகி வருகிறது.

முதுகுளத்தூரில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய தண்ணீரில் பொதுமக்கள் மீன் பிடித்தனர் .

இந்தக் காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாய் உடைப்பிலிருந்து வெளியேறும் தண்ணீா் அருகில் உள்ள கண்மாயின் வரத்துக் கால்வாயில் கலப்பதால், கால்வாயில் உள்ள மீன்கள் சாலையோரத்தில் வழிந்தோடிய தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து, வியாழக்கிழமை இரவு இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், சிறுவா்கள் மூங்கில் கூடை, சல்லடை, சால்வை, சேலை, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மீன்களைப் பிடித்தனா். மேலும், குழாய் உடைப்பு குறித்து பலமுறை புகாா் அளித்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT