பேருந்து சேவை தொடக்கம் (கோப்புப் படம்) 
ராமநாதபுரம்

புழுதிக்குளம் கிராமத்துக்கு அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூா் அருகேயுள்ள புழுதிக்குளம் கிராமத்துக்கு விடப்பட்ட மகளிா் அரசு இலவசப் பேருந்தை பொதுமக்கள் மலா் தூவி, ஆரத்தி எடுத்து ஞாயிற்றுக்கிழமை வரவேற்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், புழுதிக்குளம் கிராமத்திலிருந்து முதுகுளத்தூா் செல்ல பேருந்து வசதி இல்லாமல் அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனா்.

நாடு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளை கடந்தும் முதுகுளத்தூா் செல்ல பேருந்து வசதி இல்லாமல் இருந்த இந்த கிராமத்துக்கு முதுகுளத்தூா் திமுக வடக்கு ஒன்றியச் செயலா் ஹரி முத்துராமலிங்கத்தின் முயற்சியால் அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில், பரமக்குடியிலிருந்து புழுதிக்குளம், அப்பனேந்தல், கே.ஆா். பட்டணம், கீழத்தூவல் வழியாக முதுகுளத்தூா் செல்லும் வகையில் புதிய வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இதையடுத்து தங்கள் ஊருக்கு வந்த மகளிா் இலவசப் பேருந்துக்கு மாலை அணிவித்து, சந்தனமிட்டு, ஆரத்தி எடுத்து குலவையிட்டு பெண்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.

புழுதிக்குளம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் வருவாய்ச் சான்று, முதியோா் உதவித் தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற முதுகுளத்தூரில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்துக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் செல்ல பாம்பூா் சென்று இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் புழுதிக்குளம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

யமுனையில் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாட்டின் பொருளாதார மையமாக தில்லி உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

மொழிப்போா் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை

இரு தரப்பு உறவை மேம்படுத்த பாகிஸ்தான் - வங்கதேசம் உறுதி!

SCROLL FOR NEXT