சிவகங்கை

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 35 பேர் மீது வழக்கு

DIN

சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை மற்றும் மேலவண்ணாரிருப்பு கிராமங்களில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 35 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.
  சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக அவ்வூரைச் சேர்ந்த ராசியப்பன், ஆண்டவர், அசோகன் உள்ளிட்ட 20 பேர் மீது சிங்கம்புணரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  அதேபோல் எஸ்.புதூர் ஒன்றிய மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக அவ்வூரைச் சேர்ந்த அன்பு உள்ளிட்ட 15 பேர் மீது உலகம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  இளைஞர் கைது: இந்நிலையில் மேலவண்ணாரிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு(42)வுக்கு கோயில் விழா வரி வசூல் பிரச்னையில் பாலச்சந்திரன்(42) கொலைமிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில் உலகம்பட்டி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து பாலசந்திரனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT