முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து அக்கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து அக்கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
   சிவகங்கை மானாமதுரை சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவ, மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி மாணவர்கள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன் கல்லூரி வளாகத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடியுள்ளனர்.
         இந்நிகழ்வில் ஈடுபட்ட சில மாணவர்களை இடைநீக்கம் செய்யப்போவதாக தகவலறிந்த மாணவர்கள், கல்லூரி முதல்வர் அலுவலகத்தை வியாழக்கிழமை  முற்றுகையிட்டனர்.
  இதுகுறித்து தகவலறிந்து வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மகேஸ்வரி தலைமையிலான மருத்துவர்கள் மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →