சிவகங்கை

பள்ளியில் கலை இலக்கியப் பயிலரங்கம்

DIN

தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில், புதன்கிழமை  வீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி முன்னாள் மாணவர் மன்றத்தின் சார்பில் கலை இலக்கியப் பயிலரங்கம் நடைபெற்றது.
   பயிலரங்கை  பள்ளியின் அதிபர் ஜோசப் கென்னடி தொடக்கி வைத்தார். இதில் முன்னாள் மாணவர் மன்றச் செயலர் சூசைராஜ் வரவேற்றார். பள்ளியின் தலைமையாசிரியர் அகஸ்டின் ஜான்பீட்டர் வீரமாமுனிவர் உருவப் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார். தாளாளர் லூர்துசாமி பரிசளித்தார். பயிலரங்கில் "நீங்களும் பேச்சாளர் தான்' என்ற தலைப்பில் பேராசிரியர் பாகை.கண்ணதாசனும், "இலக்கு நோக்கிய இலக்கியம்' என்ற தலைப்பில் புலவர் வனிதாவும், "மேடை நமதே' என்ற தலைப்பில் எழுத்தாளர் கிருஷ்ணவேணியும், "கலையாத செல்வம் கலையே' என்ற தலைப்பில் பாடகர் பாண்டிச்செல்வியும் சிறப்புரையாற்றினர். வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றச் செயலர் ஸ்டீபன் மிக்கேல்ராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT