சிவகங்கை

மானாமதுரையில் 12 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டிக் கிடக்கும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை: இரவு நேரத்தில் சிவகங்கை சென்று திரும்பும் பேருந்துகளால் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் நஷ்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 12 ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக்கழக பணிமனை செயல்படாமல் தொடர்ந்து மூடிக்கிடப்பதால் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இந்த போக்குவரத்துக்கழக பணிமனையை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 
 மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை தொடங்கப்பட்டது. மானாமதுரை பகுதியில் இயக்கப்படும் அரசு நகரப்பேருந்துகளை இரவு நேரத்தில் இந்த பணிமனைக்கு கொண்டு வந்து நிறுத்தி மறுநாள் காலையில் இங்கிருந்து புறப்பட்டு இயக்கப்படுவதற்கு வசதியாக இந்த பணிமனை தொடங்கப்பட்டது. அப்போது இந்த பணிமனையில் பேருந்துகளுக்கு டீசல் நிரப்பும் வசதி, பேருந்துகளைப் பழுது பார்க்கும் வசதி இருந்தது.
 இந்த பணிமனை தொடங்கப்பட்ட சில மாதங்களில் இதன் செயல்பாடுகள் முடக்கப்பட்டு பணிமனை மூடப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்ட பணிமனைக்கு பகல், இரவு நேரங்களில் காவலாளிகள் பாதுகாப்பு, சிப்காட் நிர்வாகத்துக்கு இட வாடகை காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மானாமதுரையைச் சுற்றி 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களுக்கு மானாமதுரையிலிருந்து இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகள் பகலில் சேவை முடிந்த பின்பு இரவு தங்கலுக்காக 18 கி.மீ. தூரமுள்ள சிவகங்கைக்கு கொண்டுபோய் நிறுத்தப்பட்டு மறுநாள் காலையில் மானாமதுரைக்கு கொண்டுவரப்படுகிறது. 
பின்னர் வழக்கம்போல் கிராமங்களுக்கு இயக்கப்படுகிறது. இரவும் அதிகாலையும் இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் இல்லாததால் டீசல், பணிமனை வாடகை, காவலாளி சம்பளம் உள்ளிட்ட பல வகைகளில் போக்குவரத்துக்கழக நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை செலவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. 
 மானாமதுரையில் செயல்படாமல் பூட்டிக்கிடக்கும் பணிமனையை திறந்து முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என உள்ளூர் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பலகட்டப் போராட்டங்கள் நடத்தியும் அரசு நிர்வாகம் இக் கோரிக்கையை கண்டுகொள்ளாத நிலைதான் தொடர்கிறது. 
தமிழக அரசும் போக்குவரத்துக்கழக நிர்வாகமும் செயல்படாமல் பூட்டிக்கிடக்கும் மானாமதுரை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை திறந்து முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப் பகுதி அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
   இது குறித்து கும்பகோணம் கோட்ட காரைக்குடி  அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியது:
மானாமதுரை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முழுமையாக செயல்படாமல் உள்ளது குறித்து தமிழக அரசுக்கு துறை நிர்வாகம் சார்பில் பலமுறை அறிக்கை சமர்பிக்கப்பட்டுவிட்டது. இப் பிரச்சனையில் அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT