சிவகங்கையில் நூல் வெளியீட்டு விழா
சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் மற்றும் எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய வேட்கை என்னும் நூல் வெளியீட்டு விழா
சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் மற்றும் எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய வேட்கை என்னும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட மைய நூலகர் ரமணிபுனிதகுமாரி தலைமை வகித்தார். விழாவில்,நேரு இளையோர் மையத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர்,பொறியாளர் பாரதிதாசன், ஓவிய ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன், வாசகர் வட்டத் துணைத் தலைவர் செல்லமணி ஆகியோர் நூல் குறித்தும், நூலாசிரியர் குறித்தும் அறிமுக உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய வேட்கை என்னும் நூலை அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ச.ஞானசம்பந்தன் வெளியிட, நூலக வாசகர் வட்டத் தலைவர் டி.என்.அன்புதுரை பெற்றுக் கொண்டார். பின்னர்,எழுத்தாளர் ஈஸ்வரன் ஏற்புரையாற்றினார். முன்னதாக நூலகர் போஸ் வரவேற்றார். நிறைவாக நூலகர் முத்துக்குமார் நன்றி கூறினார்.