கூட்டுறவு சார்-பதிவாளர் மீது தாக்குதல்: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 15 பேர் மீது வழக்கு
காரைக்குடியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் தொடர்பாக வேட்பாளர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி, கூட்டுறவு சார் - பதிவாளரை
காரைக்குடியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் தொடர்பாக வேட்பாளர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி, கூட்டுறவு சார் - பதிவாளரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 15 பேர் மீது காரைக்குடி வடக்குக் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு 2 பேரை புதன்கிழமை கைது செய்தனர்.
கூட்டுறவு சங்கத் தேர்தல் அலுவலராக இருந்த சார்- பதிவாளர் கலைச்செல்வனிடம் வேட்பாளரை தேர்வு செய்தது குறித்து திருப்பத்தூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிவகங்கை மாவட்டச் செயலாருமான கே.கே. உமாதேவன் தனது ஆதரவாளர்களுடன் சென்று கேள்வி எழுப்பி, சார்-பதிவாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து சார்-பதிவாளர் கலைச்செல்வன் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன் உள்பட 15 பேர் மீது சார்பு-ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து, பாலு, ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தார்.
திருப்பத்தூரில்
மற்றொரு வழக்கு:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள சிராவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், 9 உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 31 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்து இரண்டு மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஏற்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியலில் முன்னாள் எம்.எல்.ஏ. வும், அ.ம.மு.க மாவட்ட செயலாளருமான உமாதேவனின் மகன் முத்துக்குமார் பெயர் இல்லை இடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தனது ஆதரவாளருடன் சென்ற உமாதேவன் அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரியான ஞானம்பாளை ஆபாசமாக பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஞானம்பாள் கொடுத்த புகாரின் பேரில் நாச்சியார்புரம் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் உமாதேவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.