முகப்பு
சிவகங்கை

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வியாழக்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:33 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தில் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வியாழக்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மறவமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாக்காளர் பட்டியலை வழங்க கோரியும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மறவமங்கலத்தை சேர்க்க வலியுறுத்தியும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகையை வழங்க கோரியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காளையார்கோவில் ஒன்றியச் செயலர் மூர்த்தி தலைமையில் மறவமங்கலத்தில் உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
       இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 50 பெண்கள் உள்பட 75 பேரை காளையார்கோவில் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.