சிவகங்கை

பெண்ணிடம் மோசடி மென்பொருள் நிறுவன உரிமையாளர் கைது

DIN


காரைக்குடியில் பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி மோசடி செய்த இளைஞர், வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த நிலையில் அவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து (31).இவர்,காரைக்குடி வருமான வரித்துறை அலுவலகம் அருகே மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்பின்(27) என்பவர் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.
காளிமுத்து, ஜோஸ்பினை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அவரிடமிருந்து ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் ரொக்க பணமும்,11 பவுன் தங்க நகையும் பெற்றாராம்.
இந்நிலையில், காளிமுத்து அதே நிறுவனத்தில் பணிபுரியும் வேறொரு பெண்ணை புதன்கிழமை (நவ.14) திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த ஜோஸ்பின் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் காளிமுத்து மீது வழக்குப் பதிந்து, அவரை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT