சிவகங்கை

அண்ணா பல்கலை. மண்டல கபடிப் போட்டி தொடக்கம்

DIN

அண்ணா பல்கலைக்கழக 16-வது மண்டல அளவிலான கபடிப்போட்டிகள் காரைக்குடி அருகே கீரணிப்பட்டியில் உள்ள கிட் அன்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
   சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை  27 பொறியியல் கல்லூரிகளின் அணிகளைச் சேர்ந்த 250 வீரர்கள் இப்போட்டிகளில் விளையாடுகின்றனர். போட்டிகளை கிட் அன்ட் கிம் கல்விக்குழுமத்தின் தலைவர் வீ. அய்யப்பன் தொடக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துத்தெரிவித்தார். இறுதிப்போட்டி வியாழக்கிழமை (செப். 20) நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் கலியமூர்த்தி, அண்ணாமலை மற்றும் பேராசிரியர்கள், பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT