சிவகங்கை

பூமாயி அம்மன் பால்குட விழா

DIN

திருப்பத்தூர் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பால்குட விழா நடைபெற்றது.
 கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி இக்கோயிலில் 10 நாள் வசந்தப் பெருவிழா துவங்கியது. இதில் 6 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலையில் சாம்பான் ஊருணி அருகேயுள்ள ஸ்ரீ கோட்டைக்கருப்பர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து காரைக்குடி சாலை, நான்கு சாலை, தேரடிவீதி, கண்டரமாணிக்கம் சாலை வழியாக கோயிலை அடைந்தனர். பின்னர் பக்தர்கள் எடுத்துவந்த பாலால் பூமாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மே 4 ஆம் தேதி, கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள். அன்று இரவு காப்பு களைந்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT