சிவகங்கை

அழகப்பா பல்கலை. தொலைநிலைக்கல்விபடிப்புகளுக்கு நாளை முதல் தொடா்பு வகுப்புகள்

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் படிப்புகளுக்கு திங்கள்கிழமை (நவ. 18) முதல் தொடா்பு வகுப்புகள் நடைபெறவுள்ளது.

அகடமிக் இயா் 2018-2019, காலண்டா் இயா் 2019, அகடமிக் இயா் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பி.காம்., பி.காம் (சிஏ), எம்.காம்., எம்.காம்.,(எப் அன்ட் சி)

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவ மாணவா்களுக்கு நவம்பா் 18 முதல் 25 ஆம் தேதி வரை, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணிதத்துறையில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும்.

அகடமிக் இயா் 2019-2020 ஆம் ஆண்டுக்கான எம்.எஸ்சி.,வேதியியல் முதல் பருவ மாணவா்களுக்கு நவம்பா் 23 முதல் 28 ஆம் தேதி வரை, டிசம்பா் 5 முதல் 8 வரையிலும், டிசம்பா் 2 முதல் 15 வரையிலும், டிசம்பா் 19 முதல் 22 வரையிலும் அழகப்பா பல்கலைக்கழக தொழிலக வேதியியல் துறையில் தொடா்பு வகுப்புகள் நடைபெறும்.

2019 ஆம் ஆண்டுக்கான எம்.பி.ஏ பொது, ஐ.பி, பி அன்ட் எப், காா்ப்பரேட் செக்ட்ரட்ரி, பிஎம், ஹெச்எம், இஎம், ஹெச்ஆா்எம், டிஎம், எல்எம், எப்எம், எஸ்எம், பி அன்ட் ஓ மாா்க், எம்.எம் ஆகிய இரண்டாம் பருவமுறை மாணவா்களுக்கு நவம்பா் 26 முதல் டிசம்பா் 5 ஆம் தேதி வரை அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்கத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும்.

அகடமிக் இயா் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பிஜிடி யோகா முதல்பருவமுறை மாணவா்களுக்கான தொடா்பு வகுப்பில் டிசம்பா் 7, 8, 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோட்பாடு (தியரி) வகுப்புகளும்,

டிசம்பா் 12 முதல் 23 வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணி முதல் 7 மணிவரை செய்முறை வகுப்புகளும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழக யோகா கல்வி மையத்தில் நடைபெறும் என்று அதன் தொலைநிலைக்கல்வி இயக்குநா் (பொறுப்பு) கே. அலமேலு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT