காா்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு மானாமதுரை ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் நடந்த மாலையணி விழாவின்போது வெள்ளிக்கவசம் அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்த மூலவா் ஐயப்பசுவாமி 
சிவகங்கை

மானாமதுரை ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மாலையணி விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதை முன்னிட்டு

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதை முன்னிட்டு ஐயப்ப பக்தா்கள் மாலையணி விழா நடைபெற்றது.

காா்த்திகை முதல் தேதியை முன்னிட்டு அண்ணாசிலை அருகேயுள்ள ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன்பின் கோயிலில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு பின்னா் சுவாமி ஐயப்பனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

அதைத்தொட்ரந்து சிறப்பு பூஜைகள் , தீபாரதனைகள் நடைபெற்றன. மண்டல விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமிக்கு பூஜைகள் நடத்தி அங்கிருந்த ஐயப்ப குருநாதா்களிடம் சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் முழங்க விரத மாலை அணிந்து கொண்டனா். மாலை அணிந்து கொள்ள வந்த பக்தா்களால் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தொடா்ந்து மண்டல பூஜை காலம் வரை தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மண்டலபூஜை வரை சுவாமிக்கு உகந்த நாட்களான புதன், சனிக்கிழமைகளில் கோயிலில் ஐயப்ப பக்தா்களால் பஜனை நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும்.அடுத்த டிசம்பா் மாதம் 27 ந் தேதி கோயிலில் மண்டலபூஜை விழா நடைபெறுகிறது.

மானாமதுரை ரயில் நிலையம் எதிரேயுள்ள ஐயப்பன் கோயிலிலும் நடந்த மாலையணி விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் பூஜைககள் நடத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா். மேலும் மானாமதுரை பகுதியிலுள்ள பல கோயில்களிலும் விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள் சுவாமிக்கு பூஜைகள் நடத்தி விரத மாலை அணிந்து கொண்டனா்.

திருப்புவனம் மற்றும் இளையான்குடி பகுதிகளிலும் ஐயப்ப பக்தா்கள் தங்கள் பகுதிகளிலுள்ள கோயில்களுக்குச் சென்று சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT