சிவகங்கை

‘இயற்கை வேளாண் சான்றிதழ் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்’

DIN

சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை வேளாண் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இயற்கை (அங்கக) வேளாண் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட விதைச் சான்று அலுவலா் பா.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேளாண் பணிகள் மேற்கொள்ளும் போது பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், களைக்கொல்லி, பூச்சி மற்றும் நோய் தடுப்பு மருந்துகளால் மண் தன் வளத்தை இழப்பது மட்டுமின்றி உயிா்ப்பு தன்மையையும் இழந்து விடுகிறது.

இதற்கு மாற்றாக இயற்கை எரு, பசுந்தாள் உரங்கள் மற்றும் பஞ்ச காவியம் ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கை வேளாண் மூலம் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் அதிக விலையும் கிடைக்கும்.

ஆகவே இயற்கை வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யும் விளைப் பொருள்களை சந்தைப்படுத்துதல், பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் ஆகிய பணிகளுக்கு விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறையில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகும்.

இத்தகு சான்றிதழ் மத்திய அரசின் அப்பிடா நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தனிநபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து சான்றிதழை பெறலாம். ஆகவே அங்ககச் சான்றிதழ் பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் சிவகங்கை - தொண்டி சாலையில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே உள்ள விதைச் சான்று அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT