சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக தொடா் மழைவீடுகள் இடிந்து சேதம்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைந்து,குளிா்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இதுதவிர,வேளாண் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதே சமயம், சிவகங்கை பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக சிவகங்கை அருகே வள்ளனேரி கிராமத்தில் அழகுசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான வீடு சேதமடைந்து சுவா் இடிந்து விழுந்தது. தற்போது அந்த வீட்டில் யாரும் வசிக்காததால் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் அழகுசுந்தரம் தனது குடும்பத்தினருடன் வேறொரு பகுதியில் வசித்து வருகிறாா் என்பது குறிப்பிடதக்கது. இதேபோன்று,பூவந்தி மற்றும் மானாமதுரை பகுதிகளிலும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT