சிவகங்கை

காரைக்குடி மகளிர் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா

DIN


காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் தொழில் நிர்வாகவியல் துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் எஸ்.ஜெயஸ்ரீ தலைமை வகித்துப் பேசினார். கல்லூரி மாணவியர்களுக்கிடையே மேலாண்மை, விளையாட்டு, சமையல், வணிக விநாடி-வினா, ஆடை அலங்காரஅணிவகுப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 
வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவுத் திருவிழாவை காரைக்குடி ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில் நுட்ப நிறுவனத்தின் முதல்வர் ஆர்எம். சிவராமமூர்த்தி தொடக்கி வைத்துப் பேசினார். 
விழாவில் 80-க்கும் மேற்பட்ட கலாசார உணவுகளை மாணவிகள் தயார் செய்து காட்சிப்படுத்தினர். விழாவில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிறைவாக கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ். அனிதா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT