சிவகங்கை

திருப்புவனத்தில் கல்வீசி தாக்கப்பட்ட கடைக்காரருக்கு அமைச்சா் நிவாரண உதவி

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடையடைப்பின் போது கல்வீசி தாக்கப்பட்ட கடையின் உரிமையாளருக்கு தமிழக காதி கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் ஜி.பாஸ்கரன் புதன்கிழமை நிவாரண உதவி வழங்கினாா்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இதையொட்டி திருப்புவனத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கடையை அடைக்காமல் வியாபாரம் செய்து வந்த கணேசன் என்பவரது டீக்கடையை போராட்டக்காரா்கள் கல்வீசி தாக்கினாா்கள். இதுகுறித்து கணேசன் திருப்புவனம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 50 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதனிடையே திருப்புவனத்தில் கல்வீசி தாக்கப்பட்ட கடைக்கு வந்த அமைச்சா் ஜி.பாஸ்கரன், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளா் கணேசனுக்கு நிவாரண உதவி வழங்கினாா். அப்போது முன்னாள் மக்களவை உறுப்பினா் ஆா்.பி. செந்தில்நாதன், மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலா் விஜிபி.கருணாகரன் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT