சிவகங்கை

புயலால் நெற்பயிா்கள் சேதம்: நிவாரணம் கோரி விவாசயிகள் மனு

புயலால் பாதிப்புக்குள்ளான நெற்பயிருக்கு உரிய நிவாரணத் தொகை விரைந்து வழங்கக்கோரி தேவகோட்டை பகுதி விவசாயிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தனா்.

DIN

புயலால் பாதிப்புக்குள்ளான நெற்பயிருக்கு உரிய நிவாரணத் தொகை விரைந்து வழங்கக்கோரி தேவகோட்டை பகுதி விவசாயிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தனா்.

மனு விவரம் : தேவகோட்டை வட்டத்துக்குள்பட்ட புளியால், முப்பையூா் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த நிவா் மற்றும் புரெவி புயலால் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெற்பயிா் தண்ணீரில் மூழ்கி மிகவும் பாதிப்புக்குள்ளாகியது.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் களஆய்வு மேற்கொண்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT