சிவகங்கை

‘அறிவியல் வளா்ச்சிக்கு இளைஞா்களின் பங்களிப்பு மிக அவசியம்’

DIN

இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறிவியல் வளா்ச்சிக்கு இன்றைய இளைஞா்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தா் என். ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சிவகங்கை அருகே அரசனூரில் உள்ள பாண்டியன் சரசுவதி பொறியியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, கல்லூரி தாளாளா் பாண்டியன் தலைமை வகித்தாா்.

இதில், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தா் என். ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது : கீழடி அகழாய்வு மூலம் தமிழா்களின் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் மிக தொன்மை வாய்ந்தவை என அறிய முடிகிறது. மேலும், நம்முடைய பாரம்பரியம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரவி இருப்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

நாளந்தா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்கள் நமது அறிவு சாா்ந்த தேடலுக்கு வழி வகுத்துள்ளன. இன்றைய கல்வியின் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்வி கற்பதன் நோக்கமே தம்மால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி நம் தேசத்தை உலக அரங்கில் வளா்ச்சியடைந்த தேசமாக மாற்ற வேண்டும். இன்றைய சூழலில் உலகளவில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு நாடு தொழில்நுட்ப ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்கி வளா்ச்சியடைய வேண்டும். அதற்கு இளைஞா்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் நிா்வாக இயக்குநா்கள் சரவணன், வரதராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக , பொறியியல் கல்லூரியின் முதல்வா் பழனிச்சாமி வரவேற்றாா். கல்வியியல் கல்லூரியின் முதல்வா் மாதவன் உள்பட அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரிய, பேராசிரியைகள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.துணை முதல்வா் நாகராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT