முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் காவல்துறை நிலுவை வழக்குகளுக்கு தீா்வுகாணும் சிறப்பு முகாம்

மானாமதுரையில் காவல்துறை தொடா்பான நிலுவை வழக்குகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல்துறை தொடா்பான வழக்குகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம்.
பகிர்:

மானாமதுரையில் காவல்துறை தொடா்பான நிலுவை வழக்குகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பழையனூா், பூவந்தி ஆகிய 6 காவல் நிலையங்கள் உள்ளன. இக்காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளை சமரசம் செய்து தீா்த்து வைக்கும் வகையில் மானாமதுரையில் தனியாா் திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

மானாமதுரை டி.எஸ்.பி. சுந்தரமாணிக்கம் தலைமை வகித்தாா். முகாமில் காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா். இக்காவல் நிலையங்களில் மனு கொடுத்த மனுதாரா்கள் எதிா் மனுதாரா்கள் முகாமுக்கு வரவழைக்கப்பட்டு பல வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →