முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் கிராமசபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
மானாமதுரை ஒன்றியத்தில் கிராமசபைக் கூட்டங்கள்
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ராஜகம்பீரம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் முஜீப் ரகுமான் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா, ஒன்றியக் கவுன்சிலர் அண்ணாதுரை, இடைக்காட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட ஊர் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்துக்கு  எதிர்ப்பு தெரிவிப்பது,  விவசாயிகளை பாதிக்கும் இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் பல ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →