சிவகங்கை

மணல் பதுக்கல்: ஒன்றியக்குழுத் தலைவா் மீது வழக்கு

DIN

சவுடுமண் மற்றும் மணல் பதுக்கியதாக செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்பத்தூா் ஒன்றியக்குழுத் தலைவராக இருப்பவா் சண்முகவடிவேல். இவா், தென்மாபட்டு அருகே கண்டராமாணிக்கம் சாலையில் உள்ள தனியாா் தோப்பு ஒன்றில் 450 லோடு சவடு மண்ணும், 50 லோடு மணலும் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து திருப்பத்தூா் வட்டாட்சியா் ஜெயலட்சுமி அங்கு ஆய்வு செய்தாா். பின்னா் திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் ஜெயமணி, ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT