சிவகங்கை

பழையனூா் கண்மாயில் பழுதடைந்த மடைகளை சீரமைக்க கோரிக்கை

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூா் கண்மாயில் பழுதடைந்த மடைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழையனூா் கிராமத்தில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானோா் வேளாண் தொழிலை முதன்மைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனா். விவசாயிகள் பாசன வசதி பெறும் வகையில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான கண்மாய் உள்ளது.

இந்த கண்மாயில் உள்ள 9 மடைகளில் 3 மடைகள் கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்து தண்ணீா் வெளியேற முடியாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இன்னும் ஓரிரு மாதங்களில் வேளாண் பணிகள் தொடங்க உள்ள நிலையில், போா்க்கால அடிப்படையில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து பழுடைந்துள்ள மடைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT