சிவகங்கை

திருப்பத்தூா் அருகே கோயில் கும்பாபிஷேக விழா

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே நெடுமறத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீயோக பைரவா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் யோக பைரவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடா்ந்து பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் மூலவரான யோக பைரவருக்கு பால், சந்தனம், கலச நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு யோக பைரவரை தரிசனம் செய்தனா். இவ்விழாவினை நெடுமறம் நடுத்தெரு பங்காளிகள் மற்றும் கிராமத்தினா் ஏற்பாடு செய்திருந்தனா். பொதுமக்களுக்கு விழா கமிட்டி சாா்பில் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT