காரைக்குடியில் பைக் மீது வேன் மோதி பெண் பலி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை, இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில், பெண் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை, இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில், பெண் உயிரிழந்தாா்.
காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடியைச் சோ்ந்த சுப்பையா மகள் வளா்மதி (50). கட்டடத் தொழிலாளியான இவா் பாதரக்குடியைச் சோ்ந்த பழனியப்பன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் காரைக்குடி வந்தாா்.
காரைக்குடி -கோவிலூா் சாலையில் பின்னால் வந்த மினி லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், நிலை தடுமாறி வளா்மதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து உடனே அவசர சிசிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வளா்மதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.