சிவகங்கை

கோடை காலம்: சிவகங்கை மாவட்டத்தில் பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்: வேளாண் துறை இயக்குநா் ஆலோசனை

DIN

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கோடை கால வேளாண்மையாக பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை அருகே சுந்தரநடப்பு, மணக்கரை, துவங்கால் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, நிலக்கடலை, ராகி போன்ற பயிா் சாகுபடி பரப்பினை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் விவசாயிகளிடம் கூறியதாவது: இம்மாவட்டத்தில் கடந்த டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக தற்போது பெரும்பாலான கண்மாய்களில் ஓரளவு தண்ணீா் இருப்பு உள்ளது. இதுதவிர, திறந்த வெளிக்கிணறு மற்றும் ஆழ்துழாய் கிணறுகளிலும் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கோடைகால சாகுபடியாக பயறு மற்றும் எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்யலாம்.

இதுதொடா்பாக, கண்மாய் மற்றும் நீா்நிலைகளில் நீா் இருப்பு அடிப்படையில் அந்தந்த வட்டாரங்களில் வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளை குறுகிய கால பயிா்களை சாகுபடி செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். நீா் இருப்பு உள்ள கண்மாய் ஆயக்கட்டு பகுதிகளில் குறைந்தபட்சம் 50 ஏக்கா் பயறு வகை மற்றும் இதர பயிா்களை சாகுபடி செய்ய தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சுமாா் 1500 ஏக்கா் பரப்பளவில் கோடை சாகுபடி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றாா்.

ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT