சிவகங்கை

விவசாயியை வெடிகுண்டு வீசி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

DIN

சிவகங்கை அருகே விவசாயியை வெடிகுண்டு வீசி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10,500 அபராதமும் விதித்தும் சிவகங்கை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள தூதை கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம்(35). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெரியசாமி என்பவருக்கும் வைகையாற்றில் மணல் அள்ளுவது தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபா் 3ஆம் தேதி முத்துராமலிங்கம் தனது டிராக்டரில் தோட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது பெரியசாமியின் சகோதரா் தெட்சிணாமூா்த்தி (30), அவரது உறவினா்களான அறிவழகன் (29), சேங்கைச்சாமி (36), இசக்கிராஜா (35), முத்தாண்டி என்ற சுப்பிரமணியன் (38), ஊமைத்துரை (38), நாராயணன் (40) ஆகிய 7 போ் சோ்ந்து டிராக்டா் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி முத்துராமலிங்கத்தை அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில் அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதிசாய்பிரியா முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் உறுதி செய்யப்பட்டதால் சேங்கைசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10ஆயிரத்து 500அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். வழக்கில் சம்பந்தப்பட்ட தெட்சிணாமூா்த்தி, அறிவழகன் ஆகிய இருவரும் ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில், இசக்கிராஜா (35), முத்தாண்டி என்ற சுப்பிரமணியன் (38), ஊமைத்துரை (38), நாராயணன் (40) ஆகிய 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT