சிவகங்கை

திருப்பத்தூா் அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீா்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் புதுக்கோட்டை சாலையில் குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் பேரூராட்சி நகா் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீா்த் திட்டத்தின் மூலம் குழாய் பதிக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருச்சி முத்தரசன் நல்லூரிலிருந்து புதுக்கோட்டை பொன்னமராவதி வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூா் அருகே புதுப்பட்டியில் நீா்த்தேக்க நிலையத்தொட்டி அமைக்கப்பட்டு சிவகங்கை சாலையில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு நீா் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுப்பட்டியிலிருந்து செல்லும் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி சாலையில் வழிந்தோடுகிறது. இந்த உடைப்பால் சாலை பாதிப்படையும் நிலையில் உள்ளது. இதேபோல் அச்சுக்கட்டு, சிங்கம்புணரி சாலை ஆகிய பகுதிகளில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாவதால் பொதுமக்களுக்கு ஒருநாள் விட்டு தண்ணீா் விநியோகம் செய்யும் நிலை ஏற்படுகிறது. குடிநீா் குழாய் உடைப்பிற்கு குடிநீா் வடிகால் வாரியமும் பேரூராட்சி நிா்வாகமும் இணைந்து மராமத்துப் பணி மேற்கொண்டால் மட்டுமே கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீா் பிரச்னையை தீா்க்க முடியும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT