சிவகங்கை

ராஜகம்பீரம் ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி நாளை சாலை மறியல்

DIN

மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தில் அனைத்துப் பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரம் ஊராட்சியை ஒட்டி மதுரை -ராமேசுவரம் நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த சாலை அமைக்கப்படுவதற்கு முன்னா் அனைத்துப் பேருந்துகளும் ராஜகம்பீரம் ஊருக்குள் வந்து சென்றன. நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டதும் ஒரு சில பேருந்துகளைத் தவிர அனைத்துப் பேருந்துகளும் ராஜகம்பீரம் ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. இதன் காரணமாக ராஜகம்பீரம் ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.

இதனால் அனைத்துப் பேருந்துகளும் ராஜகம்பீரம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊா் மக்கள் தெரிவிக்கின்றனா்.

இதையடுத்து ராஜகம்பீரம் ஊருக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை (ஏப். 22)

ராஜகம்பீரத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT