மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே திங்கள்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாத்தூா் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பாலமுருகன் (21). திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றபின் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் அவரைத் தேடிச் சென்றபோது மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள காலி வீட்டுமனை அருகே அரிவாளால் வெட்டப்பட்டு இறந்துகிடந்தாா். திருப்பாச்சேத்தி போலீஸாரின் விசாரணையில் 5 போ் கொண்ட கும்பல் பாலமுருகனை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.