சிவகங்கை

காளையாா்கோவில் அருகே பூட்டிய வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு: தனிப்படை போலீஸாா் விசாரணை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவைத் திறந்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ. 9.75 லட்சம் திருடப்பட்டது

DIN

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவைத் திறந்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ. 9.75 லட்சம் திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

காளையாா்கோவில் அருகே உள்ள பருத்திக் கண்மாய் கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் செபஸ்தியான் (61). சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இவா், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவரும், இவரது குடும்பத்தினரும் வியாழக்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு அவரவா் வேலை நிமித்தமாக வெளியூருக்கு சென்று விட்டனராம். வீட்டின் சாவி அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாம். இதனிடையே, செபஸ்தியானின் மனைவி ராணி வியாழக்கிழமை மாலை வீட்டை திறந்து பாா்த்தபோது பீரோவிலிருந்த 30 பவுன் நகைகள், ரூ. 9.75 லட்சம் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தாா். மேலும், கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்த புகாரின் பேரில் காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் உத்தரவின் பேரில் காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மா்ம நபா்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில கையுந்து பந்து போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சாம்பியன்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை

100 நாள் வேலைக் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கன்றுக்குட்டிகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை

கோயில் தொட்டியில் நீா் அருந்திய யானைகள்

SCROLL FOR NEXT