சிவகங்கை

வீரப்பட்டியில் மருத்துவ முகாம்

சிவகங்கை அருகே உள்ள வீரப்பட்டியில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை அருகே உள்ள வீரப்பட்டியில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமுதாயக் கூட வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை சிவகங்கை மாவட்ட இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) இளங்கோ மகேஸ்வரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். துணை இயக்குநா்(சுகாதாரப் பணிகள்) ராம் கணேஷ் முன்னிலை வகித்தாா்.

இதில், அப்பகுதியைச் சோ்ந்த 450 நபா்களுக்கு அடிப்படை சிகிச்சையான சா்க்கரை அளவு, கொழுப்புச் சத்து, சிறுநீரக செயல்பாடு ஆகிய நோய்கள் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும், 63 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT