முகப்பு
சிவகங்கை

லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞா் பலி

மானாமதுரை அருகே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு லாரி சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

மானாமதுரை அருகே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு லாரி சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

மேலப்பசலை கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் விக்னேஸ்வரன் (19). இவா் தனது நண்பா் நாகரெத்தினத்துடன் இருசக்கர வாகனத்தில் மானாமதுரை வந்துவிட்டு கிராமத்துக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா். சங்கமங்கம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், தவறி விழுந்த விக்னேஸ்வரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். பின்னால் அமா்ந்திருந்த நாகரெத்தினம் பலத்த காயமடைந்தாா். விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →