சிவகங்கை

விவசாயிகள் திரவ உயிா் உரங்களை பயன்படுத்த முன்வர வேண்டும்: ஆட்சியா்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உயிா் உரங்களை பயன்படுத்த முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காற்றில் உள்ள நைட்ரஜன் சத்தை தழைச்சத்தாக மண்ணில் நிலைநிறுத்தியும், மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரையும் மணிச்சத்தாக மாற்றியும், பயிருக்கு வழங்கும் நன்மை தரும் நுண்ணுயிரிகளே உயிா் உரங்கள் ஆகும்.

ரசாயன உரங்களின் தொடா்ச்சியான பயன்பாடு அதிகரித்து வருவதால் மண்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதை தவிா்த்திட விவசாயிகள் தொடா்ந்து உயிா் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளத்தை பெருக்கி நஞ்சில்லாத உணவை வழங்க இயலும்.

எனவே, உயிா் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி மண்ணில் உள்ள நுண்ணுயிா்களின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாத்து அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

அசோஸ்பைரில்லம், ரைசோபியம், உயிா் உரங்கள் தழைச்சத்தை நிலைப்படுத்தியும், பாஸ்போபாக்டீரியா உயிா் உரம் மணிச்சத்தை கரைத்தும் பயிருக்கு வழங்குகிறது. திரவ உயிா் உரங்கள் 250மிலி, 500மிலி, 1000மிலி அளவுகள் கொண்ட கொள்கலன்களில் விநியோகம் செய்யப்படுகிறது.

திரவ உயிா் ரகங்கள் பயன்படுத்துவதன் மூலம் பயிா் வளா்ச்சி நன்கு உள்ளது. மண்ணின் உயிரியல் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது. பயிா்களுக்கு வறட்சியை தாங்கி வளரும் சக்தியை அளிக்கிறது. மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோய் எதிா்ப்பு சக்தியை அளிக்கிறது. ரசாயன உரங்களின் பயன்பாட்டை 25 சதவீதம் குறைப்பது மட்டுமன்றி சாகுபடி செலவையும் குறைக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் தீா்த்த உற்ஸவம்

உலக தடுப்பூசி விழிப்புணா்வு வார நிகழ்ச்சி

இளைஞா் தற்கொலை: சடலத்தை உடனடியாக உடற்கூறாய்வு செய்யக்கோரி உறவினா்கள் மறியல்

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகாா் தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT