முகப்பு
சிவகங்கை

காரைக்குடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ. 2 லட்சம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2 லட்சம் ரொக்கத்தை தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2 லட்சம் ரொக்கத்தை தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

காரைக்குடி அருகே கண்டனூா் பகுதியில் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி நேரு தலைமையிலான அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்தவழியாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் உசிலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா், வள்ளிநாயகி ஆகியோா் வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது அதில் உரிய ஆவணம் இன்றி ரூ. 2 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல்செய்தனா்.

பின்னா் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சி யா் பி. மதுசூதன்ரெட்டி அளித்த உத்தரவின்பேரில் மாவட்ட கருவூல அலுவலகத்தில் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.