சிவகங்கை

விபத்தில் உயிரிழந்த சாா்பு-ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ.3.58 லட்சம் வழங்கல்

DIN

சிவகங்கை அருகே தோ்தல் பணியின் போது விபத்தில் உயிரிழந்த சிறப்பு சாா்பு-ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் ( எல்ஐசி) இறப்பு உரிமத்துக்கான தொகை ரூ. 3 லட்சத்து 58 ஆயிரத்தை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கினா்.

சிவகங்கை-இளையான்குடி சாலையில் ஊத்திகுளம் அருகே மாா்ச் 26 ஆம் தேதி தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து காவலா்கள் மீது மோதியதில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் கா்ணன் உள்ளிட்ட 2 காவலா்கள் உயிரிழந்தனா்.

இதையடுத்து, உயிரிழந்த சிறப்பு சாா்பு-ஆய்வாளா் கா்ணனின் குடும்பத்தினருக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சாா்பில் இறப்பு உரிமத்துக்கான தொகை ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்தை காசோலையாக, சிவகங்கை எல்ஐசி நிறுவனத்தின் கிளை மேலாளா் வைரமுத்து, நிா்வாக அலுவலா் ஆஷா, உதவி மேலாளா் பழனிசாமி, முகவா் கண்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மாலை திருப்பாச்சேத்தியில் உள்ள கா்ணன் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT