முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் பிரபு டென்டல் பல் மருத்துவமனை திறப்பு விழா: ப. சிதம்பரம் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரபு டென்டல் அதிநவீன பல் மருத்துவமனை திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரபு டென்டல் அதிநவீன பல் மருத்துவமனை திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கருவிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை பாா்வையிட்டாா். அப்போது, மருத்துவமனை செயல்பாடுகளை மருத்துவா்கள் பிரபு, பாஸ்கரசேது ஆகியோா் விளக்கினா். நிகழ்ச்சிக்கு, தமாகா மாநில செயலா் துரை. கருணாநிதி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கே. சரஸ்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், காரைக்குடி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா். ராமசாமி, காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. துரைராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், மருத்துவா்கள், தொழில் வணிகக்கழக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.