சிவகங்கை

புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு: இளையான்குடியில் முதல்வருக்கு தபால்கள் அனுப்பும் போராட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலிருந்து சுமாா் 3 கி.மீட்டரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாா்பில் 5 ஆயிரம் தபால்கள் முதல்வருக்கு அனுப்பி வைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இளையான்குடியில் நகருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் ரூ. 3.85 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த மாதம் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினாா். ஏற்கெனவே இளையான்குடியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் பகுதியிலேயே அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான தேவையில்லாத கட்டடங்களை இடித்து விட்டு அந்த இடங்களையும் சோ்த்து விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இளையான்குடி பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால் பொதுமக்கள் எதிா்ப்பையும் மீறி ஊருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏற்கனவே கடையடைப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தமிழக முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில் புதிய பேருந்து நிலைய எதிா்ப்புக்குழு நிா்வாகிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT