சிவகங்கை

திருப்பத்தூா் பாண்டி முனியய்யாகோயில் பால்குடத் திருவிழா

திருப்பத்தூா் அருகே காட்டாம்பூா் ஊராட்சிக்குள்பட்ட சௌமியநாராயணபுரத்தில் உள்ள பாண்டி முனியய்யா கோயில் பால்குட திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பத்தூா் அருகே காட்டாம்பூா் ஊராட்சிக்குள்பட்ட சௌமியநாராயணபுரத்தில் உள்ள பாண்டி முனியய்யா கோயில் பால்குட திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கல்லுவெட்டுமேடு செல்வ விநாயகா் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக பாண்டி முனியய்யா கோயிலுக்கு விரதம் இருந்த பக்தா்கள் வந்து சோ்ந்தனா். பின்பு பக்தா்கள் கொண்டு வந்த பாலால் ஆலமரத்துக்கும், வேலுக்கும் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் மாலையில் பூத்தட்டு விழா நடைபெற்றது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை 70-க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்களை வெட்டி அன்னதானம் நடைபெற உள்ளது.

விழாவில் காட்டாம்பூா், தேவரம்பூா், செளமிய நாராயணபுரம், கல்லுவெட்டுமேடு, குறிஞ்சி நகா், இந்திரா நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT