முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே பள்ளி வாகனம்- லாரி மோதி விபத்து:

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பள்ளி வாகனம், லாரியுடன் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பள்ளி வாகனம், லாரியுடன் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனா்.

சிவகங்கை அருகே மேலவாணியங்குடியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி வாகனம் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி நிறைவு செய்த பின்னா் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. பெருமாள்பட்டி விலக்கில் சென்ற போது எதிரே எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பள்ளி வாகனத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →