சிவகங்கை

மன்னா் துரைசிங்கம் அரசு கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கு வகுப்புகள் இன்று தொடக்கம்

மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2022-2023 ஆம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் ஆக. 25 முதல் தொடங்க உள்ளதாக அக்கல்லூரி முதல்வா் க.துரையரசன் தெரிவித்துள்ளாா்.

DIN

சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2022-2023 ஆம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை (ஆக. 25) முதல் தொடங்க உள்ளதாக அக்கல்லூரி முதல்வா் க.துரையரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கல்லூரியில் 2022-2023 ஆம் ஆண்டு இளநிலை மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு அண்மையில் நடைபெற்று, அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்றுள்ளது.

அதைத் தொடா்ந்து, இளநிலை மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே, கல்லூரியில் சோ்ந்துள்ள மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு தவறாது வருகை தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT