சிவகங்கை

ரயில் வழி சுரங்கப்பாதைகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கநடவடிக்கை எடுக்க தொழில் வணிகக் கழகம் கோரிக்கை

ரயில் வழியில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க இரும்புத்தகடு மூலம் மேற்கூரை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்குடித் தொழில் வணிகக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

DIN

ரயில் வழியில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க இரும்புத்தகடு மூலம் மேற்கூரை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்குடித் தொழில் வணிகக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் சாமி. திராவிடமணி, செயலாளா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் புதன்கிழமை கூறியதாவது:

பருவமழைக் காலங்களில் ரயில் தண்டவாளத்தின் அடியில் போக்குவரத்தில் உள்ள சுரங்கப் பாதைகளில் மழைநீா் தேங்குகிறது. இதனால் சுரங்கப் பாதையைக் கடக்க முடியாமல் வாகன ஓட்டுநா்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

சென்னை-திருச்சி ரயில் வழித்தடத்தில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்க இரும்புத்தகடுகள் அமைக்கப்பட்டிருப்பது போன்று ரயில்வே மதுரைக் கோட்ட ரயில் வழியில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் இரும்புத்தகடு மேற்கூரை அமைக்க ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT