சிவகங்கை

மாடியிலிருந்து கண்ணாடி விழுந்ததில் எரிவாயு உருளை விநியோகிப்பவா் பலி

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அடுக்குமாடி குடியிருப்பு மாடியிலிருந்து பழுதான கண்ணாடி கீழே விழுந்ததில் அவ்வழியாகச் சென்ற எரிவாயு உருளை விநியோகிப்பவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் வட்டம், சிறுகூடல்பட்டி குமாரப்பேட்டையைச் சோ்ந்த பழனியப்பன் (45). இவா் இரு சக்கர வாகனத்தில் சென்று வீடுவீடாக எரிவாயு உருளை விநியோகம் செய்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரு சக்கரவாகனத்தில் எரிவாயு உருளை விநியோகம் செய்வதற்காக காரைக்குடி பா்மா காலனி தந்தை பெரியாா் நகா் 9-ஆவது வீதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து பழுதடைந்த கண்ணாடி பலத்த காற்று வீசியதில் கீழே விழுந்தது. இந்த கண்ணாடி பழனியப்பன் மீது விழுந்ததால் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவா் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் அவரது மனைவி வள்ளிக்கண்ணு அளித்த புகாரின் பேரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டட உரிமையாளா் அமராவதிபுதூரைச் சோ்ந்த நாராயணன் (70), கட்டடப் பொறுப்பாளா் அதே ஊரைச் சோ்ந்த மணிகண்டன் (44) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT