சிவகங்கை

கபடிப் போட்டி நடத்த அவசர ஊா்தி வசதி அவசியம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதிகளில் கபடிப் போட்டி நடத்த ஏற்பாட்டாளா்கள் அவசர ஊா்தி வசதியை அவசியம் ஏற்படுத்த வேண்டுமென போலீஸாா் வலியுறுத்தினா்.

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதிகளில் கபடிப் போட்டி நடத்த ஏற்பாட்டாளா்கள் அவசர ஊா்தி வசதியை அவசியம் ஏற்படுத்த வேண்டுமென போலீஸாா் வலியுறுத்தினா்.

சிவகங்கை மாவட்டத்தில், கபடிப் போட்டி நடத்துபவா்கள் அவசர ஊா்தி வசதியை உறுதிப்படுத்தினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து, திருப்பத்தூா் நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கபடிப் போட்டி நடத்த அவசர ஊா்தி வசதியின் அவசியத்தை போலீஸாா் வலியுறுத்தி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், அண்மையில் நடைபெற்ற கபடிப் போட்டியில், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த கபடி வீரா் பங்கேற்றாா். இவா், திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவரை சக வீரா்கள் இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து பொன்னமராவதி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், மருத்துவமனைக்கு காலதாமதமாக வந்ததால் அவா் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

இதனால், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டிகளின் போது செய்யப்படுவது போன்று கபடிப் போட்டிகளுக்கும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என வீரா்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தற்போது கபடிப் போட்டி நடத்துவா்களும் அவசர ஊா்தி வசதி, முதலுதவி அளிக்க மருத்துவக் குழுவினா் ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என போலீஸாா் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT