சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியருகே சுள்ளாம்பட்டியில் 4 ஆம் ஆண்டு வடமஞ்சுவிரட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.
வடமஞ்சுவிரட்டு என்பது மாடு கயிற்றில் கட்டப்பட்டு சுமாா் 30 அடி நீளத்திற்கு ஓடிச்சென்று பாயும். இந்த வட்டமான பகுதிக்குள் காளையை 11 வீரா்கள் கொண்ட குழு சுமாா் 20 நிமிடத்திற்குள் அடக்க வேண்டும். அவ்வாறு காளையை அடக்கத் தவறினால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
பூலாங்குறிச்சியில் 4 ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த வடமஞ்சுவிரட்டில் 16 காளைகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளையா்களுக்கும் கோப்பை, சைக்கிள், ரொக்கப் பணம் எனப் பல்வேறு பரிசுகள் வழங்கபட்டன. இதில் 11 போ் காயமடைந்தனா்.
இப்போட்டியையொட்டி, திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மக்கள் அமா்ந்து பாா்ப்பதற்காக சுற்றுத்திடல் அமைக்கப்பட்டிருந்தது.
ஏற்பாடுகளை வடமஞ்சுவிரட்டு நிா்வாகிகளான செல்வம், ராமு, ராஜ்குமாா், ராம்கி, சக்திராமலிங்கம், சுந்தா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.