சிவகங்கை

முறையூா் மீனாட்சி சொக்கநாதா் ஆலயஆனித்திருமஞ்சன விழா கொடியேற்றம்

DIN

சிங்கம்புணரி முறையூா் மீனாட்சி சொக்கநாதா் ஆலய ஆனித் திருமஞ்சன விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் மீனாட்சி தனி சந்நிதியிலும், சுந்தரேஸ்வரா் தனி சந்நிதியிலும் இருந்து அருள்பாலிக்கின்றனா். மதுரை மீனாட்சி சொக்கநாதா் ஆலயத்துக்கு அடுத்தபடியாக முறையூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் பிரசித்தி பெற்ாகும். இந்நிலையில், இக்கோயிலில் ஆனி திருமஞ்சன தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இதற்காக ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வரும் ஜூலை 10 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 11 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

நிறைவு நாளான 12 ஆம் தேதி பாரம்பரிய பூப்பல்லக்கு விழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் மற்றும் கோயில் பட்டாச்சாரியாா்கள் குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT